இரண்டாவது முறையாக சேர்ந்த ஜோடி – நெருப்பில்லாமல் புகையுமா?

வியாழன், 20 ஏப்ரல் 2017 (13:17 IST)
அஸ்வின், ஸ்வாதி இருவரும், ‘திரி’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். எனவே, ‘திரி’ எப்போது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள்.

 
 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் அஸ்வின் – ஸ்வாதி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால்,  இவர்களைவிட விஜய் சேதுபதி – நந்திதா ஜோடியே பெரிதும் கவனிக்கப்பட்டது. அதிலும், விஜய் சேதுபதியின் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ டயலாக் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், புதியவரான அசோக் அமிர்தராஜ் இயக்கும் ‘திரி’ படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். எனவே,  இருவருக்கும் இடையில் ‘சம்திங் சம்திங்’ இருக்கலாம் என்று முணுமுணுக்கிறது கோடம்பாக்கம். தந்தை – மகன் பாசத்தை  மையப்படுத்திய இந்தக் கதையில், தந்தையாக ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்