5 மொழிகளில் வெளியாகும் 'பீஸ்ட்' - அசத்தல் போஸ்டர்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (13:31 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது. 

 
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளன பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது. 
 
விஜய்யின் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவது இதுதான் முதல்முறை என்றும் விஜய்யின் முதல் பான் இந்திய திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஐந்து மொழிகளிலும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்