தளபதி 67 பூஜை மற்றும் டீசர் தேதி இதுவா?

வியாழன், 1 டிசம்பர் 2022 (20:16 IST)
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 67 படத்தின் பூஜை டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே அந்த படத்தின் டீசரை வெளியிட்டது போல் தளபதி 67 படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
தளபதி விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், கௌதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் இருப்பதாக தெரிகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்