ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் அமைச்சர் மற்றும் நடிகைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:11 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஆசிரிய நியமன ஊழல் வழக்கு பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கின் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மீதான நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க  மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் அமைச்சர் பார்த்தசாரதியின் வீட்டில் சமீபத்தில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

அதன்பின், அமைச்சருக்கு நெருக்கமான நடிகை அரிதா முகர்ஜியின் வீட்டில் 50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நடிகை அர்பிதாவின் வங்கிக் கணக்கில் ஆசிரியர்  நியமன ஊழலில் கிடைத்த பணம் ரூ.2 கோடிக்கு மேல் உள்ளதாகவும், அதை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாககவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதையடுத்து அர்பிதா முகர்ஜி மற்றும் பார்த்தா சட்டர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் நீதிமன்ற காவல்  நீட்டிக்கப்பட்டுள்ள   நிலையில் சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடந்தது. இதில் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியின் நீதிமன்றக் காவலை  14 நாட்கள் நீட்டித்து ( ஆகஸ்ட் 18 வரை) நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்