தன்னிடம் மோசமாக நடந்துகொண்ட கால் டாக்சி ட்ரைவர் - புகைப்படத்துடன் வெளியிட்ட ரித்விகா!
வெள்ளி, 8 நவம்பர் 2019 (10:44 IST)
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் UBER கால் டாக்சியில் பயணித்துள்ளார். அப்போது அந்த கார் ட்ரைவர் ரித்விகாவிடம் மிகவும் மோசமாக பேசியதாக கூறி அவருடன் புகைப்படத்துடன் மொத்த Detailயை தனது ட்விட்டரில் வெளியிட்டு UBERல் பயணிப்பது பாதுகாப்பற்றது என குறிப்பிட்டுள்ளார்.
Very unsafe journey in Uber @Uber driver is so so rude & the car condition is worst, terrible.
Tata indica TN07AR4798 UBER pic.twitter.com/In35IKLwzL