தின்னுட்டு தின்னுட்டு எருமமாடு மாதிரி இருக்காங்க!!! நடிகையை வம்பிழுத்த பிரபலம்
திங்கள், 12 நவம்பர் 2018 (11:16 IST)
நடிகை தனுஸ்ரீ தத்தா எந்நேரமும் தின்னிட்டு தின்னுட்டு மாடு மாதிரி இருக்காங்க என கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருந்து தற்பொழுது அசிங்கமாய் எருமமாடு மாதிரி இருக்கிறார் என கூறியிருக்கிறார்.
இவரின் இந்த குற்றச்சாட்டிற்கு தனுஸ்ரீ என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.