நடிகர் ரஜினியுடன் தமிழருவி மணியன் மீண்டும் சந்திப்பு: மறுபடியுமா?
புதன், 27 ஏப்ரல் 2022 (18:15 IST)
நடிகர் ரஜினியுடன் தமிழருவி மணியன் மீண்டும் சந்திப்பு: மறுபடியுமா?
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த தமிழருவி மணியன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தமிழருவி மணியன் அவரது கட்சியின் ஆலோசகராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது
ஆனால் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டு விட்டதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் தமிழருவி மணியன் மிகவும் விரக்தி அடைந்து இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்து உள்ளதை அடுத்து மீண்டும் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதற்கான விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்