தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால் பதிக்கும் கார்ப்பரேட் நிறுவனம்!
புதன், 13 அக்டோபர் 2021 (17:01 IST)
டி சீரிஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதிக்க உள்ளது. அதற்கான பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறது.
பாலிவுட்டின் பிரபல ஆடியோ நிறுவனமான டி சீரிஸ் அங்கு பிரம்மாண்டமான படங்களையும் தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் இப்போது அந்த கார்ப்பரேட் நிறுவனம் தமிழிலும் படங்களை தயாரிக்கும் முனைப்பில் உள்ளது.
அதற்காக தமிழின் முன்னணிக் கதாநாயகர்களிடம் தேதி கேட்டு இப்போது அனுகி வருகிறது.