மிஷ்கினின் அடுத்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ்!

திங்கள், 6 மே 2019 (18:13 IST)
'சித்திரம் பேசுதடி' முதல் 'சூப்பர் டீலக்ஸ்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ள இயக்குனர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' என்ற படத்தை இயக்கியும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற படத்தில் நடித்தும்  வருகிறார். மேலும் அவர் விரைவில் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மிஷ்கின் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது
 
மிஷ்கின், அதுல்யாரவி, சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சுஜித் சராங் ஒளிப்பதிவில் ராமராவ் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை கல்பத்ரு பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்