‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘அறம் செய்து பழகு’. விக்ராந்த், சுந்தீப் கிஷண் இருவரும் ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படம், தமிழ் – தெலுங்கில் உருவாகிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், மருத்துவத் துறையின் கறைகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென இந்தப் படத்தின் தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றியுள்ளார் சுசீந்திரன். இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.