அதலபாதாளத்தில் இருந்த சூர்யாவின் மார்க்கெட்டை சூரரைப் போற்று திரைப்படம் தூக்கி நிறுத்தியுள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். பாண்டிராஜ், வெற்றிமாறன் என வரிசையாக இயக்குனர்கள் அவர் பட்டியலில் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது அவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.