நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா சூர்யா?… பிரபல இயக்குனர்களோடு சந்திப்பு!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (10:08 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சில பிரபல தெலுங்கு இயக்குனர்களை சந்தித்து பேச்ச்வார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் அகாண்டா இயக்குனர் போயபட்டி சீனுவிடம் சமீபத்தில் கதைகேட்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  மேலும் கார்த்திகேயா 2 இயக்குனர் சந்தூ மொண்டட்டியையும் சந்தித்து கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்