’சூர்யா 42’ டைட்டில் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள் உற்சாகம்

செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:38 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
முதல் கட்டமாக கோவாவில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை புதுச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வெளிநாடுகளில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் அஜீத்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் இது ஒரு பொங்கல் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்