திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை: டுவிட்டரில் கொதித்தெழுந்த திரையுலகினர்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:03 IST)
தமிழக அரசு அடுத்த கட்ட ஊரடங்கிற்கான தளர்வுகளை சற்று முன் அறிவித்த நிலையில் அதில் திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை என்பது என்ற கட்டுப்பாடு திரையுலகினர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை என்பது எந்த வகையில் நியாயம் என்பது திரையுலகினரும் கேள்வியாக உள்ளது 
 
இந்த நிலையில் திரையரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்படாததை அடுத்து டுவிட்டரில் திரையுலகினர் கொந்த்ளித்து வருகின்றனர் #SupportMovieTheatres என்ற ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்