ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 100 -வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. 250 கோடி பட்ஜெட் என சொல்லப்படும் இந்தப் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். சரித்திர ஃபேன்டஸி திரைப்படமான இதற்கு சங்கமித்ரா என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிக்க ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் இருவரும் நடிப்பது உறுதி என்கின்றன செய்திகள்.