பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.
இந்நிலையில் படத்தில் ராம்சரணின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக போட்டோஷுட்டை சில தினங்களுக்கு முன் நடத்தி முடித்துள்ளார் ஷங்கர். விரைவில் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளார் மதுரை எம்பி சு வெங்கடேசன். இவர் தமிழுக்கான திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற உள்ளாராம். மேலும் பாடலாசிரியர் விவேக் படத்துக்கான தமிழ் வசனங்களை எழுத உள்ளாராம்.