கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட்: பிரியா வாரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (12:45 IST)
பிரியா வாரியர் போல மாணவிகள் கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கோவையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்று தெரிவித்துள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் வைரலானவர் மலையாள நடிகை பிரியாவாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் வரும் பாடலில் வகுப்பறையில் சக மாணவனை பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி  இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது.
 
இதனைப்பார்த்த கோவையிலுள்ள உள்ள பிரபல கல்லூரி மாணவிகள் பிரியா வாரியர் போல வகுப்பரையில் கண்ணடிப்பதாக கல்லூரி நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், அந்த கல்லூரி நிர்வாகம் மாணவிகளை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது, அதில் பிரியா வாரியர் போல கல்லூரியில் கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்