எச்சரித்த இளையராஜா! என்ன சொன்னார் தெரியுமா எஸ்பிபி?

ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (08:11 IST)
பின்னணி பாடகர்கள், இசை நிகழ்ச்சிகளில்  அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதை எதிர்த்து அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்.
 
இதனால் இளையராஜாவின் பாடல்களை அவர் பாடவில்லை. சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில் கச்சேரிகளில் மீண்டும் இளையராஜா பாடல்களை பாடுவேன் என்றும் இதற்காக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் சந்திப்பேன் என்றார்.
 
இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பின்னணி பாடகர்கள் பாடக் கூடாது என்று வீடியோ மூலம் கண்டித்துள்ளார். மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். பாடகர்கள், பாடகிகளும் எனது பாடலுக்கு பணம் வாங்குகிறார்கள். அந்த பணத்தில்தான் பங்கு கேட்கிறேன், இலவசமாக பாடுவதுக்கு தடையில்லை என்று கூறினார்.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செய்தியார்களிடம் பேசுகையில்:
 
இளையராஜா பாடல் ராயல்டி விவகாரம் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை, என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என தெரிவித்தார் .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்