விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 29 நவம்பர் 2024 (10:15 IST)
ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி மும்பை தாராவியில் வாழ் மக்களின் கதையைப் பேசியப் படம். இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகியப் பிரிவுகளின் கீழ் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஆஸ்கர் வென்ற மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் கூறி தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தினார்.

அதையடுத்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அவர் பல ஹாலிவுட் படங்களிலும் வெளிநாட்டுப் படங்களிலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். இந்நிலையில் இப்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பாகத்தின் உரிமையை ‘பிரிட்ஜ் 7’ என்ற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்வாதி ஷெட்டி “சில கதைகள் எப்போதுமே நம் மனதில் தங்குபவை. அப்படிப்பட்ட கதைதான் ஸ்லம்டாக் மில்லியனர். உலகளாவிய கலாச்சார எல்லைகளைக் கடந்தது அந்த கதை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்