நாய் சேகர் ஓடாதுன்னு அப்போவே சொன்னேன்… வடிவேலுவை வம்பிழுக்கும் பிரபல நடிகர்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (10:05 IST)
வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இதனால் படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் வடிவேலுவோடு பல படங்களில் நடித்த நடிகர் சிங்கமுத்து நாய் சேகர் படம் ஓடாதுன்னு நான் முன்பே சொன்னேன் எனப் பேசியுள்ளார். மேலும் அவர் “வடிவேலு தன்னோடு நடித்து அவரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நடிகர்களை எல்லாம் மாற்றிவிட்டார். ஒரே ஆள் தேரை இழுக்க முடியாது. இந்த படம் வெளியானால் இப்போதிருக்கும் காமெடியன்கள் எல்லாம் காணாமல் போவார்கள் என சொல்லி இருந்தார். ஆனால் நாய் சேகர் படத்தைப் பார்த்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்