சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:41 IST)
சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி3 நேற்று வெளியானது. சி 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால்விட்டிருந்ததால் திரையரங்குகளில் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.

 
திருச்சி ரம்பா திரையரங்கில் நேற்று மதிய காட்சியின் போது எட்டு பேர் தங்களின் செல்போனில் படத்தை ரகசியமாக படம்  பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் எட்டு பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்வர்களிடமிருந்து அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்