சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் சிம்பு டிமிக்கு கொடுத்து கொண்டிருப்பதாக வதந்திகள் பரவியது. இதனால் இந்த படம் டிராப் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோலிவுட்டில் பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. சிம்பு நடிக்கவிருந்த 'மாநாடு' கைவிடப்பட்டதாகவும், புதிய பரிணாமத்துடன் 'மாநாடு' குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!