சக நடிகருக்கு உதவிய சிம்பு!!

வெள்ளி, 19 மே 2017 (14:44 IST)
சிம்பு தன்னுடைய படங்களில் நடிப்பது, பாடுவது இவை அனைத்தையும் தாண்டி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடுவது, சிறப்பு தோற்றத்தில் நடிப்பது போன்றவற்றை செய்து வருகிறார். 


 
 
தற்போது சிம்பு AAA படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வருவதாகவும் இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் ஆவலாக படத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
 
இந்நிலையில் சிம்பு, விஷ்ணு விஷால் நடித்திருக்கும் கதாநாயகன் என்னும் படத்திற்கு வசனம் பேசியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்