மீராவை சிம்பு காதலித்தார் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை - கலாய்த்த தர்ஷனின் காதலி!

சனி, 27 ஜூலை 2019 (11:45 IST)
பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். 


 
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனை மீரா காதலிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் மீரா மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர். 


 
இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகையும் தர்ஷனின் காதலியா சனம் ஷெட்டி பிரபல இணையத்தளம் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது மீரா மிதுன் பற்றி பேசிய அவர்,    அவங்க பெரிய ஆளுங்க. அவங்கள சிம்பு லவ் பண்ணாத என்கிட்டயே சொல்லிருக்காங்க. அப்புறம் அவங்கள ஜீவா கூட லவ் பண்ணிருக்காரு. ஆனால் இவங்க தான் அவங்களோட லவ்வ ஏத்துக்கலையாம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் மட்டும் நடிக்காம இருக்காங்க. ஏன்னா அவங்க ஒரிஜினல் கேரக்டரே இதுதான் என்று கூறி பங்கமாக கலாய்த்து சிரித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்