இந்த சிம்புவதான் நாங்க கேட்டோம்… ஈஸ்வரன் டீசர் பார்த்து மகிழ்ச்சியான் ரசிகர்கள்!

சனி, 14 நவம்பர் 2020 (08:00 IST)
சிம்பு மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.

சிம்பு, நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்துள்ள சுசீந்தரன் பொங்கல் வெளியீடாக கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 4.32 மணிக்கு ஈஸவரன் படத்தின் டிரைலர் வெளியானது. இளமை ததும்ப ஒல்லியான தோற்றத்தில் கிராமத்து இளைஞராக சிம்பு கலக்கலாக இருக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு சிம்பு படத்துக்காகதான் நாங்க காத்துட்டு இருக்கோம் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்