மகனுக்கு பயந்து லிப்லாக் காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்

புதன், 24 மே 2017 (05:00 IST)
சத்யராஜ் மகனும் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகருமான சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிக்கும் இந்த படத்தை சிபிராஜ் தயாரித்து நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றார்



 


இந்த படத்தின் ஒரு காட்சியில் சிபிராஜ், ரம்யா நம்பீசனுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டியதிருந்தது. இந்த காட்சியில் நடிக்கும்படி இயக்குனர் கூற, சிபிராஜ் லிப்லாக் காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த காட்சி கதைக்கு தேவை என்று பிரதீப் எவ்வளவோ எடுத்து கூறியும் இந்த காட்சியை எனது மகன் பார்த்தால் தப்பாக நினைப்பான், எனவே இந்த காட்சி வேண்டாம்' என்று பிடிவாதமாக இருந்துவிட்டாராம். இதை இயக்குனர் பிரதீப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பின்னர் வேறு வழியில்லாமல் இந்த காட்சியை இயக்குனர் மாற்றியுள்ளாராம்.

இந்த படத்தில் வரலட்சுமி போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இதுவொரு பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் கதை தான் இந்த படம் என்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு த்ரில் கிடைக்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் இயக்குனர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்