வேங்கையன் மகனை அடுத்து ஒத்தையில நிற்கும் வேங்கையன் மக!

வெள்ளி, 1 ஜூன் 2018 (21:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் டீசரில் இடம்பெற்ற வசனமான 'வேங்கையன் மகன் ஒத்தைய நிக்கிறேன், தில்லிருந்தா மொத்தமா வாங்க' என்ற வசனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த வசனத்தை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் தயங்கவில்லை
 
இந்த நிலையில் 'விஷாலின் 'திமிறு' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள நகைச்சுவை கிராமத்து படமான 'அண்டாவ காணோம் திரைப்படம் வரும் ஜூன் 29 முதல் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விளம்பர போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் 'எலேய்...வேங்கையன் மக ஒத்தைல நிக்கேன், தில்லிருந்தா மொத்தமா வாங்களா' என்ற வசனம் உள்ளது. இதற்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
 
ஸ்ரேயா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கியுள்ளார். அஸ்வமித்ரா இசையில் ஷங்கர் ஒளிப்பதிவில், சத்யராஜ் நாராயணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜெ.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்