சிவகார்த்திகேயனின் அயலான் குறித்து முக்கிய அப்டெட்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (10:06 IST)
அயலான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்றுடன் முடிந்தது. 

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த படத்துக்கு பொருளாதார சிக்கல்கள் எழுந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியது.  சென்னையில் நடந்து வந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  
 
ஆனால் படத்தின் ரிலீஸ் இப்போது இல்லையாம். இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுதான் ரிலீஸாகுமாம். இன்னும் பத்து மாதங்களுக்கு கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படம் தாமதமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்