ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். ரஜினி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். அதனால் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.