படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷங்கர் படத்தின் படப்பிடிப்புக்காக புனேவில் பிரம்மாண்டமாக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகள் மற்றும் கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் மோதும் காட்சிகளை படமாக்கி வருகிறார்.
ராம் சரண் தேஜா நடிப்பில் அடுத்து ஆர் ஆர் ஆர் படம் வெளியாக உள்ளதால் அவரின் அடுத்த படத்துக்கு இந்தியா முழுவதும் பிஸ்னஸ் நடக்கும் என்பதால் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் இருந்து 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் 170 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.