சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:40 IST)
பிரபல நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் ஹங்கேரியில் நடைபெற்று வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்த படத்தின் டிரைலர் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி 12.06 மணிக்கு டிரைலர் வெளியாகும் என சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 
3டி டெக்னாலஜியில் உருவாகியிருக்கும் இந்த படம் சமந்தாவின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்