ஷாருக் கான் பட போஸ்டரை வைத்து நாக்பூர் போலீஸ் விழிப்புணர்வு மீம்… வைரல் டிவீட்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (10:14 IST)
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி வைரலானது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ஷாருக் கான் முகத்தை முழுவதும் மறைக்கும் விதமாக துணியால் கட்டி வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

இந்நிலையில் இந்த வித்தியாசமான போஸ்டரைப் பகிர்ந்துள்ள நாக்பூர் சிட்டி போலிஸார் “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இப்படிதான் ஆகும்” என்று அதனை வைத்து வித்தியாசமான மீமை உருவாக்கி பகிர்ந்துள்ளனர். இந்த மீம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்