இந்திய அளவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் இந்தி நடிகர் ஷாரூக் கான். கடந்த ஆண்டு அதிக ட்விட்டர் ஃபாலோவர்களை கொண்ட இந்தியர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார் ஷாரூக் கான். முதலிடத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இரண்டாம் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் இருந்தார்கள்.
சமீபத்தில் ஷாரூக்கானிடம் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி கேட்கும் வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக் பிரபலம் ஆனது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஷாரூக்கான் பதிலளித்திருந்தார். சமீப காலமாக ஷாரூக்கானை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் அதிகரித்தி வந்தனர். இந்நிலையில் தற்போது 39 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று ட்விட்டரில் இந்தியர்கள் அதிகம் பின் தொடரும் பிரபலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ஷாரூக் கான்.