சீனு ராமசாமி படத்தில் விஜய் அப்பா

திங்கள், 31 அக்டோபர் 2016 (17:08 IST)
தர்மதுரைக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டிருக்கிறார்கள்.

 
இந்த புதிய படத்தில் நாயகனாக நடிக்க மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் எஸ்.எஏ.சந்திரசேகரனிடமும் சீனு ராமசாமி கதை கூறியிருக்கிறார். படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அவரை அணுகியுள்ளார்.
 
சீனு ராமசாமி படத்தில் எஸ்.ஏ.சி. நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், மம்முட்டி நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்