கொரோனாவில் இருந்து மீண்டார் சத்யராஜ்: டிஸ்சார்ஜ் என சிபிராஜ் தகவல்!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:13 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சத்யராஜ் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக அவருடைய மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலர்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் குறிப்பாக நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை குணமாகி வீடு திரும்பி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்