மொழி வெறிக்கு பலியான அஜித் படம்

திங்கள், 6 மார்ச் 2017 (19:45 IST)
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுவதாக இருந்தனர். 


 


 
பிறமொழிப் படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டால் கன்னடப் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று டப்பிங் படங்கள் கர்நாடகாவில் அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிடுவதாக இருந்தனர். 
 
ஆனால், கடுமையான எதிர்ப்பு காரணமாக படம் வெளியாவது பாதிக்கப்பட்டது. அஜித் படத்தை வெளியிட்டால் அந்தத் திரையரங்கை கொளுத்துவேன் என்று கன்னட நடிகர் ஒருவரே கூறினார். வரும் 11 -ஆம் தமிழ்ப் படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிடக் கூடாது என்று போராட்டம் நடத்த உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்