பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைக் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. சில ஆண்டுகாலமாக படங்கள் எதுவும் வாங்காமல் இருந்த கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம், இப்போது ஆட்சியை திமுக கைப்பற்றியதை அடுத்து புத்துணர்ச்சி பெற்று படங்களை வாங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே கலர்ஸ் தொலைக்காட்சி அதிக தொகைக்கு கேட்டும் கலைஞர் தொலைக்காட்சிக்கு கம்மியான தொகைக்குக் கொடுத்துள்ளாராம் ஆர்யா. இதன் பின்னணி என்பது தெரியவில்லையாம்.