பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சமுத்திரக்கனியை இயக்குனர் ராஜமெளலி தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்றும், இந்த படத்திற்காக சமுத்திரக்கனி ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் முக்கிய கேரக்டருக்கு தமிழ் நடிகரை இயக்குனர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் தமிழ் நடிகர் சத்யராஜூக்கு 'கட்டப்பா' என்ற முக்கிய கேரக்டரை அவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.