ஆட நினைத்தால் ஆடலாம் - சமந்தாவின் தன்னம்பிக்கை மந்த்ரா

செவ்வாய், 26 மே 2015 (11:38 IST)
சமந்தா நடிக்க வரும்முன் கூச்ச சுபாவம் நிறைந்தவராக இருந்துள்ளார். நடனம் அவ்வளவாக வராது. நடிக்க வந்த புதிதில் ஆடத் தெரியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
 
இந்த முன்கதை சுருக்கத்தைச் சொன்னால், அப்படியா என்று இன்றைய சமந்தாவை தெரிந்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள். அந்தளவு நன்றாக ஆடுகிறார். நேற்று இல்லாத இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?
கதாநாயகர்களால்தான் நான் நடனம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. நான்கு பேர் சேர்ந்து இருந்தால் அந்த இடத்துக்கு போக பயப்படுவேன். பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடும்படி ஆசிரியை வற்புறுத்தினார். நிறைய ஆட்கள் பார்ப்பார்களே என்ற கூச்சத்தால் மறுத்து விட்டேன். அந்த கூச்சமும் பயமும் சினிமாவுக்கு வந்ததும் போய் விட்டது. படப்பிடிப்பு அரங்கில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இப்போது நடனம் ஆடுகிறேன். முதலில் எனக்கு ஆட வரவில்லை. பெரிய கதாநாயகர்களிடம் இருந்து நடனம் கற்று கொண்டேன். 
 
- இப்படி ஹீரோக்களால்தான் சிறந்த ஹீரோயினானேன் என்று மனம் திறந்து கூறியுள்ளார். 
 
தற்போது சமந்தா விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி அணியின் புதிய படம் என இரு படங்களில் நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்