சமந்தாவை இனி பிகினியில் பார்க்க முடியாது

சனி, 18 ஜூன் 2016 (13:06 IST)
அஞ்சான் படத்தில் பிகினியில் தோன்றி இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்டது போல் இனி நடிப்பதில்லை என்று சமந்தா முடிவு செய்துள்ளார். 


 
 
சமந்தா ஆரம்பத்தில் சமர்த்தாகவே நடித்து வந்தார். சித்தார்த்துடனான காதல் முறிந்த பிறகு (அவரை வெறுப்பேற்றுவதற்காக? பொது இடங்களில் கவர்ச்சி உடையில் வலம்வர ஆரம்பித்தார். குறிப்பாக நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பிரா அளவுக்கேயான மேலாடை அணிந்து விழாவுக்கு வந்தவர்களை மூச்சுத் திணற வைத்தார். அதுதான் சமந்தாவின் முதல் மெகா அட்டாக். 
 
அடுத்து அஞ்சானில் பிகினி அணிந்து (பிகினிக்கு மேலே ஒரு ஸ்கார்பும் கட்டிக் கொண்டு) ஒரு பாடலுக்கு ஆடினார். பாடலின் இசையையும், வரிகளையும் தாண்டி சமந்தாவின் பிகினி கவனிக்கப்பட்டது. தமிழகத்தில் சமந்தாவின் பிகினி தலைப்பு செய்தியானது. 
 
தற்போது நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுனின் மகனுமான நாக சைதன்யாவை சமந்தா காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதன் காரணமாக இனி பிகினி போன்ற கவர்ச்சி உடைகளில் நடிப்பதில்லை என்று சமந்தா முடிவு செய்துள்ளார். 
 
ம்... பாவம் ரசிகர்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்