தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து தன்னுடைய பாட்காஸ்ட் சேனலில் பேசிவரும் சமந்தா, தற்போது ஆரோக்யமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் அத்தியாவசியம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் “நீங்கள் சில ஆரோக்யமற்ற உணவுப் பொருட்களுக்கு முன்பு விளம்பரத் தூதராக செயல்பட்டு உள்ளீர்களே” என்று கேட்கப்பட்டது.