திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற போகிறேன்! ஷாக் கொடுத்த சல்மான்!

சனி, 11 மே 2019 (11:58 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் திருமணத்தை மறுத்து புதிய முடிவு எடுத்து அதிர்ச்சியளித்துள்ளார். 


 
இந்தி திரையுலகின் மிகப்பிரபலமான நடிகரான  சல்மான் கான் 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், சங்கீத பிஜிலானி  உட்பட பல நடிகைகளை காதலித்து கிசுகிசுக்க பட்ட அவர் தற்போது லூலியா வென்டுர் என்கிற வெளிநாட்டு நடிகையை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது சல்மான் பாலிவுட் திரையுலகினருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில், திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற போவதாக முடிவெடுத்துள்ளார்.  
 
அதாவது surrogacy எனப்படும் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளாராம். இப்படி குழந்தை பெறுவதற்கு பதில் திருமணம் செய்து கொள்ளலாமே  என்று கூறினால் " திருமணம் செய்வதெல்லாம் இப்போது ஆடம்பரமாகிவிட்டது. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால், அதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன்’ என்கிறார் சல்மான் கான். 
 
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்தும் திருமணம் செய்வதற்கு என்னிடம் பணமில்லை என்று கூறும் சல்மான் கானின் பதிலை கேட்டு பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாது அவரின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்