மீண்டும் தொடங்கும் பிரபாஸின் சலார் 2… இணையும் சூப்பர் ஸ்டார்!

vinoth

புதன், 11 செப்டம்பர் 2024 (12:20 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்த சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  ஆனால் ரிலீஸுக்குப் பின் நடந்ததுதான் எதிர்பாராதது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றி, மோசமான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றது.

இரண்டு பாகங்களாக உருவான சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சலார் முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டாம் பாகத்தை கைவிடப்போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு அதை மறுத்தது. சலார் 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  விரைவில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் படத்தில் முதல் பாகத்தில் இடம்பெறாத மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்