தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு.இவரது இயக்கதிதில், நடிகர் சிம்பு.- எஸ்ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
அவர் கூறியதாவது, படத்தின் கதாநாயகன் இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும். அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால் தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும் என குறிப்பிட்டார்.