எஸ் ஏ சந்திரேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சனி, 21 ஜனவரி 2023 (08:51 IST)
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்துக்கு நான் கடவுள் இல்லை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரகனி நடித்துள்ளார்
ஸ்டார் மேக்கர் சென்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்க மேலும் இந்த படத்தில் சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.