ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை கலைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படம் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நடிகராக திருப்புமுனை தரும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்வம் தாளமயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது.