வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விபரீத முடிவெடுத்த வினய்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (10:57 IST)
சினிமாவில் இனி வில்லன் வேடங்களில் நடிக்க முடியாது என மறுத்துவிட்ட வினய், அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார்.


 
தமிழில்  ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வினய். சாக்லேட் பாயாக அறிமுகம் ஆன வினய், தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். விஷாலின் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது வெங்கடேஷ் இயக்கிய ‘நேத்ரா’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
 
நேத்ரா படத்தில் தமன் கதாநாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட் அசோகன், ரித்விகா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள பெங்களூருவில் தங்கி இருந்த வினய்யை இயக்குனர் வெங்கடேஷ்  தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அமெரிக்கா சென்று விட்டதாக மானேஜர் தெரிவித்தார்.
 
வினய் வில்லனாக நடித்த கடைசி படம் நேத்ரா தான். இனிமேல் அவர் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார் என்றும் அவரது மானேஜர் தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்