எடையைக் குறைத்து ஸ்லிம்மான அனுஷ்கா

திங்கள், 31 ஜூலை 2017 (11:58 IST)
ஏகப்பட்ட வெயிட் போட்டிருந்த அனுஷ்கா, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி விட்டாராம்.

 
நடிகர்கள் படத்துக்குத் தகுந்தாற்போல் உடல் எடையை ஏற்றி, இறக்குவதைப் பார்த்த அனுஷ்கா, தானும் அதுபோல் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக ஏற்றிய எடையை, அவரால் இறக்கவே முடியவில்லை.  இந்நிலையில், ‘பாகுபலி 2’ ஷூட்டிங்கும் வர, எடையைக் குறைக்க முடியாமல் அப்படியே நடித்தார். அதையெல்லாம் எஸ்.எஸ்.ராஜமெளலி கிராஃபிக்ஸில் குறைத்தார். அதற்கு கோடிக் கணக்கில் செலவானது தனிக்கதை.
 
‘பாகுபலி’யைத் தொடர்ந்து ‘பாக்மதி’யிலும் நடித்த அனுஷ்கா, புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. எடையைக்  குறைத்துவிட்டுத்தான் மறுவேலை என்று சபதம் எடுத்தார். அதன்படி, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து எடையைக்  குறைத்து வருகிறார். சமீபத்தில், உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட அனுஷ்காவின் புகைப்படம், சமூக  வலைதளங்களில் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்