தள்ளிப்போகும் ‘சாமி 2’ ஷூட்டிங்… காரணம் யார் தெரியுமா?
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (13:38 IST)
ஒரு இயக்குநரால் ‘சாமி 2’ படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போகிறது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்தில், த்ரிஷா மட்டுமல்லாமல், இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஷூட்டிங், திட்டமிட்டபடி முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதுவும் நாடு நாடாக கெளதம் மேனன் சுற்றுவதால், எப்போது முடியும் எனத் தெரியவில்லை. எனினும், ‘சாமி 2’ படத்தின் ஷூட்டிங், இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள். விக்ரம் இல்லாத பிற காட்சிகளை முதலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.