ரியாலிட்டி ஷோவில் பிக்பாஸ் ஜூலி போட்ட குத்தாட்டம்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (11:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சினிமா பிரபலம் அல்லாதவர் ஜூலி மட்டும்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். 
ஜூலிக்கு எழுந்த பத்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார்.  இப்போது ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி  வருகிறார். ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரை பலரும் குறைக் கூறி விமர்சனம் செய்கின்றனர்.
 
இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர், ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை விமர்சிப்பதற்கும், திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான  ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடுவராக இருக்கும் கோகுல், ஒரு குழந்தைக்கு ஜூலியை ஆடிக் காட்டுமாறு  கூறினார். பாடல் போட்ட உடனேயே, ஜூலி குத்தாட்டம் போட்டு ரசிகர்களையும், எஅடுவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
 
ஜூலி சிறப்பாக ஆடியதைப் பார்த்த கோகுல், 'ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஆடச் சொன்னதும்,  வெட்கப்படாமல் உடனே ஆடியதே' என்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்